சிட்னி டெஸ்டில் ஆஸ்திரேலியா அபார வெற்றி: பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்தது

முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 14 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.2-வது இன்னிங்சில் 115 ரன்னில் சுருண்டதால் தோல்வியை சந்திக்க நேர்ந்தது.
சிட்னி டெஸ்டில் ஆஸ்திரேலியா அபார வெற்றி: பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்தது
Published on

ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்டில் சிட்னியில் கடந்த 3-ந்தேதி தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 313 ரன்கள் சேர்த்தது. பின்னர் நேர்த்தியான பந்து வீச்சால் ஆஸ்திரேலியாவை 299 ரன்னில் சுருட்டியது. ஜமால் சிறப்பாக பந்து வீசி 6 விக்கெட் கைப்பற்றினார்.

பின்னர் 14 ரன்கள் முன்னிலைப் பெற்ற நிலையில் 2-வது இன்னிங்சில் பாகிஸ்தான் சொதப்பியது. ஹேசில்வுட் பந்து வீச்சில் விக்கெட்டுகளை மளமளவென பறிகொடுத்தது. இதனால் நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் 68 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்தது தத்தளித்தது. முகமது ரிஸ்வான் 6 ரன்களுடனும், ஜமால் ரன்ஏதும் எடுக்காமலும் இருந்தனர்.

இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ரிஸ்வான் 28 ரன்னிலும், ஜமால் 18 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் 115 ரன்னில் சுருண்டது. ஹேசில்வுட் 4 விக்கெட்டும், நாதன் லயன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இதனால் ஆஸ்திரேலியாவுக்கு 130 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயித்தது.

லபுசேன்- டேவிட் வார்னர்

130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. கவாஜா ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார். டேவிட் வார்னர் சிறப்பாக விளையாடி 57 ரன்கள் எடுத்து வெளியேறினார். இது அவரின் கடைசி டெஸ்ட் இன்னிங்ஸ் ஆகும்.

லபுசேன் 62 ரன்களும, ஸ்மித் 4 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்க ஆஸ்திரேலியா 2 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியோடு மூன்று போட்டிகள் கொண்ட தொடரை ஆஸ்திரேலியா 3-0 எனக் கைப்பற்றி பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்தது. ஆமிர் ஜாமல் ஆட்டநாயகன் விருதும், பேட் கம்மின்ஸ் தொடர் நாயகன் விருதையும் வென்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com