சம்பவம் இருக்கு.. இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்: தொடக்க வீரராக களமிறங்கும் டிராவிஸ் ஹெட்

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரராக டிராவிஸ் ஹெட் களமிறங்க உள்ளார்.
சம்பவம் இருக்கு.. இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்: தொடக்க வீரராக களமிறங்கும் டிராவிஸ் ஹெட்
Published on

கொழும்பு:

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை காலே மைதானத்தில் தொடங்க உள்ளது.

இந்த தொடருக்கான இரு அணிகளும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணிக்கு தனஞ்சயா டி சில்வா கேப்டனாகவும் ஆஸ்திரேலிய அணிக்கு ஸ்மித் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான கடைசி 2 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க பேட்ஸ்மேன்களாக கவாஜாவுடன் சாம் கான்ஸ்டாஸ் களமிறங்கினார். இந்த தொடக்க வீரர்களில் மாற்றத்தை அந்த அணி கொண்டுவந்துள்ளது.

அதன்படி தொடக்க வீரராக இருந்த சாம் கான்ஸ்டாஸ்-க்கு பதிலாக அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் களமிறங்க உள்ளார். இதனால் இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் தொடக்கம் முதலே அதிரடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com