இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் - ஆஸ்திரேலிய பவுலர் ஹேசில்வுட் விலகல்

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் ஹேசில்வுட் விலகியுள்ளார். காயத்தால் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கும் முதல் டெஸ்டில் ஆடவில்லை.
ஜோஷ் ஹேசில்வுட்
ஜோஷ் ஹேசில்வுட்
Published on

நாக்பூர்:

சிட்னியில் கடந்த மாதம் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட்டுக்கு இடது கணுக்கால் பகுதியில் காயம் ஏற்பட்டது. அதில் இருந்து அவர் இன்னும் முழுமையாக மீளவில்லை.

ஆஸ்திரேலிய அணிக்கான பயிற்சி முகாமிலும் அவர் பெரிய அளவில் பந்து வீசவில்லை. இதனை அவரே நேற்று தெரிவித்தார். இதன் மூலம் அவர் இந்தியாவுக்கு எதிராக வரும் 9-ம் தேதி நாக்பூரில் தொடங்கும் முதலாவது டெஸ்டில் விளையாட வாய்ப்பில்லை என்பது உறுதியாகியுள்ளது. 2-வது டெஸ்டிலும் அவர் ஆடுவது சந்தேகம் தான்.

ஏற்கனவே காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் முதலாவது டெஸ்டில் ஆடவில்லை. ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீனும் விரல் காயத்தால் பந்து வீச முடியாத நிலைமையில் தவிக்கிறார். இப்போது ஹேசில்வுட்டும் விலகுவது அந்த அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. அவருக்கு பதிலாக முதல் டெஸ்டில் வேகப்பந்து வீச்சாளர் ஸ்காட் போலன்ட் இடம் பெறுவார் என்று தெரிகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com