முதல் ஒருநாள் போட்டி: ஆஸ்திரேலியா, இங்கிலாந்து நாளை மோதல்

இரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் நவம்பர் 21-ம் தேதி தொடங்குகிறது.
ODI cup
Published on: 
Summary

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி பெர்த்தில் நாளை நடைபெறுகிறது.

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதும் போட்டிகள் எப்போதுமே பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாதவை.

இரு அணிகளும் அதிரடியான கிரிக்கெட்டை விளையாடுவதில் பெயர் பெற்றவை என்பதால் இந்த வெள்ளைப்பந்து தொடரிலும் சிக்சர்கள், பவுண்டரிகள் மற்றும் விக்கெட் வேட்டைக்கு பஞ்சமிருக்காது.

இந்நிலையில், இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.

முதல் ஒருநாள் போட்டி

இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி பெர்த்தில் நடைபெறுகிறது.

சொந்த மண்ணில் விளையாடும் ஆஸ்திரேலிய அணி தொடரை வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் களமிறங்குகிறது. மறுபுறம், இங்கிலாந்து அணியும் அதிரடியான பேட்டிங் மற்றும் வேகப்பந்துவீச்சு மூலம் ஆஸ்திரேலியாவுக்கு சவால் அளிக்கத் தயாராகி வருகிறது.

இரண்டாவது ஒருநாள் போட்டி நவம்பர் 15-ம் தேதி அடிலெய்டிலும், மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நவம்பர் 18-ம் தேதி ஹோபர்ட்டிலும் நடைபெறுகிறது.

இரு அணிகளிலும் திறமையான வீரர்கள் இடம்பெற்றுள்ளதால் முதல் போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதையடுத்து, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நவம்பர் 21-ம் தேதி தொடங்கி டிசம்பர் 2-ம் தேதி நிறைவடைகிறது.

X