

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் மேத்யூ பிரீட்ஸ்கி அபார சதமடிக்க, தென் ஆப்பிரிக்கா 297 ரன் குவித்துள்ளது.
ஆஸ்திரேலிய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று தொடங்கியது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி டர்பனில் உள்ள கிங்ஸ்மீட் மைதானத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் மிட்செல் மார்ஷ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி, முதலில் தென் ஆப்பிரிக்க அணி களமிறங்கியது. டெம்பா பவுமா 30 ரன்னும், ரியான் ரிக்கல்டன் 27 ரன்னும் எடுத்தனர்.
அந்த அணியின் மேத்யூ பிரீட்ஸ்கி அதிரடியாக ஆடி சதமடித்து அசத்தினார்.
பிரீட்ஸ்கி-யான்சென் ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 107 ரன்கள் சேர்த்த நிலையில் மேத்யூ பிரீட்ஸ்கி 112 ரன்னில் அவுட்டானார்.
மார்கோ யான்சென் அவருக்கு நன்கு ஒத்துழைப்பு அளித்து அரை சதம் கடந்தார். அவர் 59 பந்தில் 75 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இறுதியில், தென் ஆப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 297 ரன்கள் குவித்தது.
ஆஸ்திரேலியா சார்பில் நாதன் எல்லீஸ் 3 விக்கெட்டும், ஆடம் ஜாம்பா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 298 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்குகிறது.