3வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா வெற்றிபெற 288 ரன் இலக்கு நிர்ணயித்த தென் ஆப்பிரிக்கா

ரியான் ரிக்கல்டன், வியான் முல்டர் ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 154 ரன்கள் சேர்த்தது.
mulder, rickelton
Published on: 
Summary

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற 288 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த ஒருநாள் தொடரை தென் ஆப்பிரிக்க அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவும், 2-வது போட்டியில் தென் ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என சமனில் உள்ளது.

இரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கேப் டவுனில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

329 ரன்னுக்கு ஆல் அவுட்

அதன்படி, முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 82.3 ஓவரில் 329 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. எய்டன் மார்கிரம், மார்க்ஸ் அக்கர்மேன் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 158 ரன்கள் சேர்த்தது. அக்கர்மேன் 95 ரன்னும், எய்டன் மார்க்ரம் 78 ரன்னும் எடுத்தனர். டேவிட் பெடிங்ஹாம் 50 ரன்னும், மார்கோ யான்சன் 52 ரன்னும் சேர்த்தனர்.

ஸ்டார்க் 6 விக்கெட்

ஆஸ்திரேலியா சார்பில் மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டும், நாதன் லயன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 125.1 ஓவரில் 429 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மேட் ரென்ஷா அரை சதம் கடந்து 74 ரன்னில் அவுட்டானார். கேமரூன் கிரீன் அரை சதமடித்து 65 ரன்னில் வெளியேறினார். 3வது விக்கெட்டுக்கு இணைந்த ரென்ஷா-கிரீன் ஜோடி 126 ரன்கள் சேர்த்தது

சதமடித்த ஜோஷ் இங்லீஸ்

அடுத்து இறங்கிய ஜோஷ் இங்லீஸ் பொறுப்புடன் ஆடி சதமடித்தார். 5வது விக்கெட்டுக்கு ஜோஷ் இங்லிஸ்-அலெக்ஸ் கேரி ஜோடி 185 ரன்கள் சேர்த்தது. ஜோஷ் இங்லீஸ் 102 ரன்னும், அலெக்ஸ் கேரி 80 ரன்னும் எடுத்தனர்.

தென் ஆப்பிரிக்கா சார்பில் சைமன் ஹார்மர் 4 விக்கெட்டும், மார்கோ யான்சென் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

100 ரன்கள் பின்தங்கிய நிலையில் தென் ஆப்பிரிக்க அணி 2வது இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரரக்கர்மேன் அரை சதம் கடந்த்ய் 62 ரன் எடுத்தார். முன்னணி வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

சதமடித்த ரியான் ரிக்கல்டன், வியான் முல்டர்

6வது விக்கெட்டுக்கு ரியான் ரிக்கல்டன், வியான் முல்டர் ஜோடி இணைந்தது. இந்த ஜோடி பொறுப்புடன் ஆடி ரன்களை சேர்த்தது.

இருவரும் சதமடித்து அசத்தினர்.

இந்த ஜோடி 6வது விக்கெட்டுக்கு 154 ரன்கள் சேர்த்ததால் தென் ஆப்பிரிக்க அணி 300 ரன்களைக் கடக்க முடிந்தது. வியான் முல்டர் 115 ரன்னும், ரியான் ரிக்கல்டன் 101 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இறுதியில், தென் ஆப்ப்பிரிக்க அணி 2வது இன்னிங்சில் 134.4 ஓவரில் 387 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

ஆஸ்திரேலியா சார்பில் ஸ்டார்க் 3 விக்கெட்டும், பாட் கம்மின்ஸ், நாதன் லயன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து 288 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்குகிறது.

X