

முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 188 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து.
இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த ஒருநாள் தொடரை இங்கிலாந்து 2-1 என கைப்பற்றியது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பிலிப்ஸ் சால்ட் முதல் பந்தில் டக் அவுட்டானார்.
அடுத்து இறங்கிய அனுரின் டொனால்டு 10 ரன்னில் வெளியேறினார். இதனால் 13 ரன்னுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து திணறியது.
ஹாரி புரூக்-டாம் பாண்டன் ஜோடி இணைந்தது. ஹாரி புரூக் ருத்ர தாண்டவமாடி சிக்சர், பவுண்டரிகளாக விளாசி அரைசதம் கடந்தார்.
3வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 97 ரன்கள் எடுத்த நிலையில் ஹாரி புரூக் 65 ரன்னில் ஆட்டமிழந்தார். டாம் பாண்டன் 22 பந்தில் 39 ரன் குவித்தார்.
இறுதியில் இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் குவித்தது.
ஆஸ்திரேலியா சார்பில் ஜேக் எட்வர்ட்ஸ், நிகில் சவுத்ரி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்குகிறது.