மோசமான ஃபார்ம்: நியூசிலாந்து தொடரில் இருந்து மார்னஸ் லபுஷேன் நீக்கம்

மார்னஸ் லபுஷேன்
மார்னஸ் லபுஷேன்
Published on: 
Summary

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் மார்னஸ் லபுஷேன், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் ஆஸ்திரேலிய தேர்வுக்குழு இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் டிசம்பர் 9-ம் தேதி பெர்த்தில் தொடங்குகிறது. இந்தத் தொடரில் 32 வயதான லபுஷேன் தேர்வுக்கு பரிசீலிக்கப்பட மாட்டார் என்று ஆஸ்திரேலிய தேர்வுக்குழுத் தலைவர் ஜார்ஜ் பெய்லி தெரிவித்துள்ளார்.

2023-க்குப் பிறகு சதம் அடிக்காத லபுஷேன்

கடந்த 2023-ம் ஆண்டு ஆஷஸ் தொடருக்குப் பிறகு லபுஷேன் டெஸ்ட் போட்டிகளில் சதம் அடிக்கவில்லை. இதுவரை தொடர்ந்து 49 இன்னிங்ஸ்களாக சதமின்றி விளையாடி வருகிறார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் அவர் டக்அவுட் மற்றும் 4 ரன்களில் ஆட்டமிழந்தது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.

கடந்த 10 டெஸ்டில் 23.66 சராசரி

மேலும், கடந்த 10 டெஸ்ட் போட்டிகளில் அவரது சராசரி 23.66 மட்டுமே. ஒரு அரைசதம் மட்டுமே அடித்துள்ளார்.

இதையடுத்து அவர் மீண்டும் குயின்ஸ்லாந்து அணிக்குத் திரும்பி ஷெஃபீல்ட் ஷீல்டு தொடரில் கேப்டனாக விளையாட உள்ளார்.

இருப்பினும், அடுத்த ஆண்டு இந்தியா மற்றும் இங்கிலாந்து சுற்றுப்பயணங்களில் மீண்டும் ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடிக்க வாய்ப்பு இருப்பதாக தேர்வுக்குழு தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியா டெஸ்ட் அணியில் 3-வது இடத்தில் களம் இறங்கி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர். ஆனால் சமீபகாலமாக லபுஷேன் ஆட்டத்தில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

X