முதல் ஒருநாள் போட்டி: ஜிம்பாப்வேவை 59 ரன்களில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன் ரென்ஷா 109 ரன்கள் விளாசினார்.
ரென்ஷா
ரென்ஷா
Published on

ஆஸ்திரேலியா 50 ஓவர் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப் பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இன்று நடைபெற்ற முதல் போட்டியில் ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது.

ரென்ஷா சதம்

ரென்ஷாவின் சதத்தால் (109) ஆஸ்திரேலியா 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 294 ரன்கள் குவித்தது. கூப்பர் கொனோலி 51 ரன்கள் அடித்தார். ஜிம்பாப்வே அணி சார்பில் நிவ்மேன் நியாம்ஹுரி 5 விக்கெட்டுகள் சாய்த்தார்.

பின்னர் 295 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே களம் இறங்கியது. முதல் நான்கு வீரர்கள் பிரையன் பென்னெட் (25), பென் கர்ரன் (0), இன்னசென்ட் கையா (18), பிரெண்டன் டெய்லர் (4) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

ஜிம்பாப்வே 235 ரன்களில் ஆல்அவுட்

அதன்பின் வந்த கிரேக் எர்வின் (59), சிகந்தர் ரசா (57) அரைசதம் அடித்த போதிலும் ஜிம்பாப்வே அணி 45.1 ஓவரில் 235 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலியா 59 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஆஸ்திரேலியா அணி சார்பில் நாதன் எல்லீஸ் 5 விக்கெட் வீழ்த்தினார்.

சதம் விளாசிய ரென்ஷா ஆட்ட நாயகன் விருது பெற்றார். 2-வது போட்டி 18-ந்தேதியும், 3-வது மற்றும் கடைசி போட்டி 20-ந்தேதியும் நடைபெற இருக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com