நியூசிலாந்துக்கு எதிரான முதல் 3 ஒருநாள் போட்டி: இந்திய அணியில் ஆகிப் நபி சேர்ப்பு

பிரசித் காயத்தில் இருந்து மீண்டு வர ஒருநாள் தொடரில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளா்.
ஆகிப் நபி
ஆகிப் நபி
Published on: 

இந்திய டி20 அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடர் முடிவடைந்த பின்னர் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது.

ஆகிப் நபி ஏற்கனவே கடைசி 2 போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம்பிடிப்பு

இந்த தொடருக்கான இந்திய அணி 2 ஆக பிரிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. அதாவது முதல் 3 போட்டிகள் மற்றும் 2 போட்டிகள் கொண்ட அணியாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி 4-வது மற்றும் 5-வது போட்டிக்கான இந்திய அணியில் ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த ஆகிப் நபி இடம் பிடித்திருந்தார். இந்த நிலையில் முதல் மூன்று போட்டிக்கான அணியிலும் ஆகிப் நபி சேர்க்கப்பட்டுள்ளார்.

இதன் மூலம் ஆகிப் நபி ஐந்து போட்டிகளிலும் விளையாடுகிறார். பிரசித் கிருஷ்ணா தொடையில் ஏற்பட்ட காயத்தில் இருந்து இன்னும் குணம் அடையாத நிலையில் ஆகிப் நபி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக அறிமுகம்

கடந்த மாதம் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் ஆகிப் நபி சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். அதில் 84 ரன்கள் விட்டுக்கொடுத்து விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை. தற்போது நியூசிலாந்து ஏ அணிக்கெதிரான தொடரில் விளையாடி வருகிறார். முதல் டெஸ்டில் 6 விக்கெட் வீழ்த்தினார்.

X