ஆசிய விளையாட்டு போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது நேபாளம்

ஆப்கானிஸ்தான் அணியின் முதல் 3 பேட்ஸ்மேன்கள் ஒற்றையிலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர்.
நேபாளம்- ஆப்கானிஸ்தான்
நேபாளம்- ஆப்கானிஸ்தான்
Published on: 

ஆசிய விளையாட்டு போட்டியில் `ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ள ஆப்கானிஸ்தான்- நேபாளம் அணிகள் இன்று மதியம் மோதின. இதில் முதலில் களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் 7 விக்கெட் இழப்பிற்கு 102 ரன்கள் சேர்த்தது. முதல் மூன்று பேட்ஸ்மேன்கள் முகமது அக்ரம் (2), ஹசன் ஈசாகிள் (0), கரிம் ஜனத் (9) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த பைசல் ஷினோஜடா (30), நிஜாபுல்லா ஜத்ரன் (30) ஓரளவிற்கு தாக்குப்பிடித்து ரன்கள் சேர்த்தனர். நேபாளம் அணி சார்பில் லலித் ராஜ்பன்ஷி 3 விக்கெட்டும், குஷார் புர்டெல் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

103 ரன்கள் இலக்கு

பின்னர் 103 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நேபாளம் களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் குஷார் புர்டெல் (0), ஆசிஃப் ஷேக் (2) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

அடுத்து வந்த சுந்தீப் ஜோரா 34 ரன்களும், ரோகித் பவுடெல் ஆட்டமிழக்காமல் 33 ரன்களும் அடிக்க நேபாளம் 17.2 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்திசாயத்தில் நேபாளம் வெற்றி பெற்றது. ஏ குரூப்பில் ஆப்கானிஸ்தான், நேபாளம், ஜப்பான் அணிகள் இடம் பிடித்துள்ளது. இரு அணிகளும் தலா ஒரு போட்டிகளில் மோத வேண்டும். வெற்றி பெறும் இரண்டு அணிகள் காலிறுதிக்கு முன்னேறும்.

இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் அணிகள் நேரடியாக காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com