

வளர்ந்து வரும் வீரர்களுக்கான 50 ஓவர் கொண்ட ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கத்தார் தலைநகர் தோகாவில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இந்த தொடரின் 8-ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா 'ஏ' அணி - பாகிஸ்தான் 'ஏ' அணிகள் மோதின. பரபரப்பாக நடந்த இந்தப் போட்டியில் இந்திய அணி அதிர்ச்சி தோல்வி அடைந்தது.