ஆசிய கோப்பை: இந்தியாவுக்கு 314 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்

ஹசன் நவாஸ் 79 ரன்களும், மாஸ் சாதகத் 59 ரன்களும் எடுத்தனர்
ஆசிய கோப்பை
ஆசிய கோப்பை
Published on: 
Summary

வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 8வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு 314 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது.

வளர்ந்து வரும் வீரர்களுக்கான 50 ஓவர் கொண்ட ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கத்தார் தலைநகர் தோகாவில் நடைபெற்று வருகிறது.

இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

இந்த தொடரின் 8வது லீக் ஆட்டத்தில் இன்று இந்தியா 'ஏ' அணி - பாகிஸ்தான் 'ஏ' அணிகள் மோதி வருகின்றன.

டாஸ்

இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, 49.2 ஓவர்களில் 313 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

ஹசன் நவாஸ் 79 ரன்களும், மாஸ் சாதகத் 59 ரன்களும், பர்ஹான் யூசுப் 56 ரன்களும் எடுத்தனர். ஷமில் ஹுசைன் 33 ரன்களும், அப்துல் சமத் 28 ரன்களும், முகமது இம்ரான் ரந்தாவா 23 ரன்களும் எடுத்தனர்.

இந்திய அணி சார்பில் ஹர்ஷித் ராணா, சூர்யன்ஷ் ஷெட்ஜ், விப்ராஜ் நிகாம், பிரின்ஸ் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஆயுஷ் பதோனி 1 விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து 314 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்க உள்ளது.

X