ஐசிசி டெஸ்ட் தரவரிசை வெளியீடு - விராட் கோலி 7 இடங்கள் முன்னேற்றம்

இந்த தொடரில் 25 விக்கெட்டுகள் வீழ்த்திய அஸ்வின் பந்து வீச்சாளர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் ஜடேஜா மற்றும் அஸ்வின் முதல் இரு இடங்களை தக்க வைத்துக் கொண்டுள்ளனர்.
ஐசிசி டெஸ்ட் தரவரிசை வெளியீடு - விராட் கோலி 7 இடங்கள் முன்னேற்றம்
Published on

டெஸ்ட் போட்டியில் சிறந்த பந்துவீச்சாளர்கள் மற்றும் பேட்ஸ்மேன்களின் தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. கடைசி டெஸ்ட் போட்டியில் சதமடித்த விராட் கோலி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் பட்டியலில் 7 இடங்கள் முன்னேறி 13-வது இடத்தை பிடித்துள்ளார். ரிஷப் பண்ட் 9-வது இடத்திலும் ரோகித் சர்மா 10-வது இடத்திலும் தொடர்கின்றனர்.

மேலும் இந்த தொடரில் 25 விக்கெட்டுகள் வீழ்த்திய அஸ்வின் பந்து வீச்சாளர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் ஜடேஜா மற்றும் அஸ்வின் முதல் இரு இடங்களை தக்க வைத்துக் கொண்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com