ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 97 விக்கெட்- ஹர்பஜன்சிங் சாதனையை அஸ்வின் முறியடித்தார்

நாக்பூர் டெஸ்டில் 36 வயதான அஸ்வின் மொத்தம் 8 விக்கெட் வீழ்த்தினார்.31-வது முறையாக 5 விக்கெட் கைப்பற்றி உள்ளார். சொந்த மண்ணில் 25 தடவை 5 விக்கெட் எடுத்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 97 விக்கெட்- ஹர்பஜன்சிங் சாதனையை அஸ்வின் முறியடித்தார்
Published on

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரர்களில் ஒருவர் ஆர்.அஸ்வின். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நாக்பூரில் நடந்த முதல் டெஸ்டில் அவரது பந்து வீச்சு மிகவும் அபாரமாக இருந்தது.

நாக்பூர் டெஸ்டில் 36 வயதான அஸ்வின் மொத்தம் 8 விக்கெட் வீழ்த்தினார். முதல் இன்னிங்சில் 42 ரன் கொடுத்து 3 விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் 37 ரன் கொடுத்து 5 விக்கெட்டும் வீழ்த்தினார்.

அவர் 89 டெஸ்டில் விளையாடி 457 விக்கெட் வீழ்த்தியுள்ளார். 31-வது முறையாக 5 விக்கெட் கைப்பற்றி உள்ளார். சொந்த மண்ணில் 25 தடவை 5 விக்கெட் எடுத்துள்ளார். இதன் மூலம் கும்ப்ளேயின் சாதனையை அஸ்வின் சமன் செய்தார். இலங்கையின் முரளீதரன் 45 முறையும், ஹெராத் 26 தடவையும் 5 விக்கெட் வீழ்த்தி உள்ளனர். அவர்களுக்கு அடுத்தப்படியாக அஸ்வின், கும்ப்ளே உள்ளனர்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அஸ்வின் 97 விக்கெட் கைப்பற்றி ஹர் பஜன்சிங் சாதனையை முறியடித்தார்.

ஹர்பஜன்சிங் 18 டெஸ்டில் 95 விக்கெட் கைப்பற்றி 2-வது இடத்தில் இருந்தார். நாக்பூர் டெஸ்டில் 8 விக்கெட் எடுத்தன் மூலம் அஸ்வின் அவரை முந்தினார். அஸ்வின் 19 டெஸ்டில் 97 விக்கெட் கைப்பற்றி 2-வது இடத்தை பிடித்தார். ஹர்பஜன்சிங் 3-வது இடத்துக்கு பின்தள்ளப்பட்டார். கும்ப்ளே 111 விக்கெட் வீழ்த்தி (20டெஸ்ட்) முதல் இடத்தில் உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com