டெஸ்ட்டில் அதிக விக்கெட்கள்: வால்ஷ் சாதனையை முறியடித்த அஷ்வின்

ரவிச்சந்திரன் அஷ்வினுக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது.சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அஷ்வின் 522 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
டெஸ்ட்டில் அதிக விக்கெட்கள்: வால்ஷ் சாதனையை முறியடித்த அஷ்வின்
Published on

சென்னை:

சென்னை சேப்பாக்கத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணியை 280 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் முதல் இன்னிங்சில் சதம் விளாசிய அஷ்வின் 2-வது இன்னிங்சில் 6 விக்கெட் வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.

இதையடுத்து, அஷ்வினுக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது.

இந்நிலையில், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அஷ்வின் இதுவரை 522 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் வெஸ்ட் இண்டீசின் கர்ட்னி வால்ஷை (519 விக்கெட்) பின்னுக்கு தள்ளி அஷ்வின் 8-வது இடத்திற்கு முன்னேறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com