ஐசிசி ஒருநாள் தரவரிசை: டாப் 20 பட்டியலில் நுழைந்த அர்ஷ்தீப் சிங்

ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் முதல் இடத்தை தக்கவைத்துள்ளார்.
arshdeep singh
Published on: 
Summary

ஐசிசி ஒருநாள் தரவரிசையில் இந்தியாவின் அர்ஷ்தீப் சிங் 12 இடம் முன்னேறி டாப் 20 பட்டியலுக்குள் இடம்பிடித்துள்ளார்.

ஒருநாள் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டது. இதில் பந்துவீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் அர்ஷ்தீப் சிங் முன்னேறியுள்ளார்.

12 இடம் முன்னேறிய அர்ஷ்தீப்

நியூசிலாந்துக்கு எதிராக நடந்த ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட்ட அர்ஷ்தீப் சிங் 12 இடங்கள் முன்னேறி சக இந்திய வீரர் அக்சர் படேலுடன் 19வது இடத்தைப் பகிர்ந்துள்ளார்.

டாப் 5 வீரர்களின் விவரம்

ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் முதல் இடத்தை தக்கவைத்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவின் கேசவ் மகராஜ் 2வது இடத்தில் நீடிக்கிறார்.

பாகிஸ்தானின் அப்ரார் அகமது 3வது இடத்தில் உள்ளார்.

பாகிஸ்தானின் ஷாஹின் அப்ரிடி 4வது இடம் பிடித்துள்ளார்.

நியூசிலாந்தின் மிட்செல் சாண்ட்னர் ஒரு இடம் சரிந்து 5வது இடத்தில் உள்ளார்.

டாப் 10 பட்டியலில் ஒரு இந்திய பந்துவீச்சாளர் கூட இடம் பெறவில்லை. இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 15-வது இடத்தில் உள்ளார்.

X