ஒரு வழியா ஸ்மித்- ப்ரூக் ஜோடியை பிரித்த ஆகாஷ் தீப்: வைரல் வீடியோ

ப்ரூக் 158 ரன்னில் ஆட்டமிழந்தார்.ஸ்மித்- ப்ரூக் ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 303 ரன்கள் எடுத்தது.
ஒரு வழியா ஸ்மித்- ப்ரூக் ஜோடியை பிரித்த ஆகாஷ் தீப்: வைரல் வீடியோ
Published on

இந்தியா- இங்கிலாந்து இடையிலான 2ஆவது டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. சுப்மன் கில் (269), ஜடேஜா (89) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் முதல் இன்னிங்சில் இந்தியா 587 ரன்கள் குவித்தது.

பின்னர் இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. சிராஜ், ஆகாஷ் தீப் ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சால் இங்கிலாந்து விரைவாக 3 விக்கெட்டுகளை இழந்தது.

இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஜோ ரூட் 22 ரன்கள் எடுத்த நிலையிலும், பென் ஸ்டோக்ஸ் ரன்ஏதும் எடுக்காமலும் சிராஜ் பந்தில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் இங்கிலாந்து 84 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

இதனையடுத்து 6-வது விக்கெட்டுக்கு ப்ரூக் உடன் விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஒருநாள் போட்டி போன்று அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் ரன் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. தொடர்நது விளையாடிய இருவரும் 150 ரன்களுக்கு மேல் குவித்தனர். இவர்களை விக்கெட் எடுக்க முடியாமல் இந்திய வீரர்கள் திணறினர்.

இந்நிலையில் இந்திய அணி புது பந்தை எடுத்தது. புது பந்தை எடுத்த சில ஓவர்களில் ஆகாஷ் தீப் பந்து வீச்சில் ஹாரி ப்ரூக் கிளின் போல்ட் ஆகி வெளியேறினார். இந்த ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 303 ரன்கள் எடுத்தது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com