ஐசிசி ஒருநாள் தரவரிசை: இலங்கையை முந்திய ஆப்கானிஸ்தான்..!

முத்தரப்பு தொடரில் தோல்வியடையாமல் சாம்பியன் பட்டம் வென்றது.
ஆப்கானிஸ்தான் அணி
ஆப்கானிஸ்தான் அணி
Published on: 

ஆப்கானிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. அயர்லாந்துக்கு எதிரான தொடரை 4-0 எனக் கைப்பற்றியது. இந்தத் தொடர் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது.

முத்தரப்பு தொடரில் சாம்பியன்

அதன்பின் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் ஜிம்பாப்வே, வங்கதேச அணிகளுடன் முத்தரப்பு தொடரில் விளையாடியது.

இறுதிப் போட்டியில் ஜிம்பாப்வேவை வீழ்த்தி 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. அத்துடன் ஒரு போட்டியிலும் கூட தோற்கவில்லை.

தரவரிசையில் முதலிடம்

இதன்மூலம் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இதுவரை இல்லாத வகையில் முதன்முறையாக 6-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இதற்கு முன்னதாக வங்கதேசம், இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகளை பின்னுக்குத் தள்ளியுள்ளது. தற்போது இலங்கை அணியை பின்னுக்குத் தள்ளியுள்ளது.

இந்திய முதலிடம்

ஒருநாள் தரவரிசையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா முறையே 2 முதல் 5-வது இடங்களை பிடித்துள்ளன.

டி20 தரவரிசையில் இங்கிலாந்து முதல் இடத்தில் உள்ளது. இந்தியா 2-வது இடத்திலும், ஆஸ்திரேலியா 3-வது இடத்திலும் உள்ளன.

X