

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டன் ரஹ்மத் ஷா, டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் 7-வது இடம்பிடித்த முதல் ஆப்கானிஸ்தான் வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
டெஸ்ட் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை ஐசிசி நேற்று வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசைப் பட்டியலில் ஆப்கானிஸ்தான் வீரர் இடம்பிடித்து அசத்தியுள்ளார்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் ரஹ்மத் ஷா, டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் 7-வது இடம்பிடித்து, ஆண்கள் டெஸ்ட் தரவரிசை பேட்டிங் அல்லது பந்துவீச்சுப் பிரிவில் டாப் 10 இடங்களுக்குள் நுழைந்த முதல் ஆப்கானிஸ்தான் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
ஜிம்பாப்வே அணிக்கு எதிராக ஷார்ஜாவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் ரஹ்மத் ஷா 173 ரன்கள் குவித்தார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் அடித்த 5-வது சதம் இதுவாகும். இந்த ஆண்டில் அவர் அடித்த 2-வது சதமும் இதுதான்.
இதன்மூலம் டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் 6 இடங்கள் முன்னேறி 7-வது இடம்பிடித்துள்ளார்.
இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், தென் ஆப்பிரிக்காவின் எய்டன் மார்க்ரம், இலங்கையின் கமிந்து மெண்டிஸ் உள்ளிட்ட முன்னணி வீரர்களைப் பின்னுக்குத் தள்ளி ரஹ்மத் ஷா இந்த இடத்தைக் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.