ரஷித்கான் அபாரம் - 4வது டி20 போட்டியில் அயர்லாந்தை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்

முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 132 ரன்கள் குவித்தது.அடுத்து ஆடிய அயர்லாந்து 105 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
ரஷித் கான்
ரஷித் கான்
Published on

பெல்பாஸ்ட்:

அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. முதல், 2வது டி20 போட்டியில் அயர்லாந்தும், 3வது போட்டியில் ஆப்கானிஸ்தானும் வெற்றி பெற்றது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான நான்காவது டி20 பெல்பாஸ்டில் நடைபெற்றது. டாஸ் வென்ற அயர்லாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. மழை காரணமாக ஆட்டம் 11 ஓவராகக் குறைக்கப்பட்டது.

அதன்படி, முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 11 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் குவித்தது. அந்த நஜிபுல்லா அரை சதமடித்தார். கடைசி கட்டமாக அதிரடி காட்டிய ரஷித்கான் 10 பந்துகளில் 3 சிக்சர், ஒரு பவுண்டரி உள்பட 31 ரன்கள் குவித்தார்.

இதையடுத்து, 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணி களமிறங்கியது. டாக்ரெல் அதிகபட்சமாக 41 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இறுதியில், அயர்லாந்து 20 ஓவரில் 101 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதன்மூலம் ஆப்கானிஸ்தான் அணி 27 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரஷித் கான் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

டி20 தொடரில் இரு அணிகளும் 2-2 என சமனிலை வகிக்கிறது. வெற்றியாளரை நிர்ணயிக்கும் 5வது மற்றும் கடைசி போட்டி வரும் 17ம் தேதி நடைபெறுகிறது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com