முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி: வங்கதேசத்திற்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்

முதலில் பேட் செய்த வங்கதேச அணி 221 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.அடுத்து ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 47.1 ஓவரில் 226 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி: வங்கதேசத்திற்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
Published on

அபுதாபி:

ஆப்கானிஸ்தான், வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் அபுதாபியில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட் செய்த வங்கதேச அணி 48.5 ஓவரில் 221 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் மெஹிதி ஹசன் மிராஸ் 60 ரன்னும், தவ்ஹித் ஹ்ரிடோய் 56 ரன்னும் ரன்னும் எடுத்தனர்.

ஆப்கானிஸ்தான் சார்பில் ஓமர்சாய், ரஷித் கான் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் குர்பாஸ், அஹமத் ஷா ஆகியோர் அரை சதம் அடித்து ஆட்டமிழந்தனர்.

கடைசி கட்டத்தில் அஷ்மத்துல்லா ஒமர்சாய் 40 ரன்கள் எடுத்தார். ஹஷ்மதுல்லா ஷாஹிடி 33 ரன் எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி 47.1 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 226 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் ஒருநாள் தொடரில் ஆப்கானிஸ்தான் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

ஏற்கனவே நடந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை வங்கதேசம் 3-0 என கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com