56 ரன்களில் ஆப்கானிஸ்தான் ஆல் அவுட்: டி20 உலகக் கோப்பையில் மோசமான சாதனை படைத்த 2-வது அணி

ஆப்கானிஸ்தான் 56 ரன்களில் ஆல் அவுட் ஆனது.இதில் ஒருவர் மட்டுமே இரண்டு இலக்க ரன்களை அடித்தார்.
56 ரன்களில் ஆப்கானிஸ்தான் ஆல் அவுட்: டி20 உலகக் கோப்பையில் மோசமான சாதனை படைத்த 2-வது அணி
Published on

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் முதலாவது அரையிறுதி போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதனபடி களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்காவின் பந்து வீச்சை சாமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர்.

இதனால் ஆப்கானிஸ்தான் அணி 11.5 ஓவரில் 56 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆப்கானிஸ்தான் தரப்பில் ஓமர்சாய் (10) மட்டுமே இரண்டு இலக்க ரன்களை அடித்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் யான்சன், ஷம்ஸி 3 விக்கெட்டும் ரபாடா 2 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர்.

இதன்மூலம் டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் 56 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆன அணி என்ற மோசமான சாதனையை ஆப்கானிஸ்தான் படைத்துள்ளது. மேலும் டி20 உலகக் கோப்பையில் குறைந்த (56) ரன்னில் ஆல் அவுட் ஆன 2-வது அணி என்ற மோசமான சாதனையை ஆப்கானிஸ்தான் படைத்துள்ளது. இந்த பட்டியலில் முதல் இடத்தில் இங்கிலாந்து அணி உள்ளது.

இதை தவிர டி20-யில் ஆப்கானிஸ்தான் அணியின் குறைந்த பட்ச ஸ்கோர் இதுவாகும்.

டி2 உலகக் கோப்பைகளில் குறைந்த ஸ்கோர்கள்

55 - இங்கிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ், துபாய், 2021

56 - ஆப்கானிஸ்தான் vs தென் ஆப்பிரிக்கா, தாரூபா, 2024*

60 - நியூசிலாந்து vs இலங்கை, சட்டோகிராம், 2014

70 - வங்காளதேசம் vs நியூசிலாந்து, கொல்கத்தா, 2016

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com