

இலங்கை, இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் முத்தரப்பு ஏ ஒருநாள் தொடர் இலங்கையில் நடந்து வருகிறது.
இந்நிலையில், இலங்கையில் நடைபெற்ற 6-வது லீக் போட்டியில் இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. தம்புல்லாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 322 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் அவிஷ்கா பெர்னாண்டோ சதமடித்து 110 ரன்னில் அவுட்டானார். நிரோஷன் டிக்வெலா 66 ரன்னில் வெளியேறினார். நுவானிடு பெர்னாண்டோ 45 ரன்னில் ஆட்டமிழந்தார்.
ஆப்கானிஸ்தான் சார்பில் பரிதூன் தாவூத்சாய் 4 விக்கெட்டும், பர்மனுல்லா சபி 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 323 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் களமிறங்குகிறது.