

ஐசிசி வெளியிட்டுள்ள டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் அபிஷேக் சர்மா ஒரு இடம் முன்னேறி மீண்டும் நம்பர் 1 இடம் பிடித்தார்.
சர்வதேச டி20 போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. துபாயில் வெளியிட்டது.
அபிஷேக் சர்மா முன்னேற்றம்
பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்தியாவின் அபிஷேக் சர்மா ஒரு இடம் முன்னேறி 897 புள்ளிகளுடன் நம்பர் 1 இடத்துக்கு முன்னேறி உள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டியில் அபிஷேக் சர்மா சதமடித்து 113 ரன் விளாசினார்.
மற்றொரு இந்திய வீரரான இஷான் கிஷான் (866 புள்ளி) 2 இடம் சரிந்து 3-வது இடத்தில் உள்ளார். கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர் (758), 9வது இடத்துக்கு தள்ளப்பட்டார். திலக் வர்மா (724 புள்ளி) தொடர்ந்து 10-வது இடத்தில் நீடிக்கிறார். சஞ்சு சாம்சன் 26-வது இடத்தில் இருந்து 20-வது இடத்துக்கு முன்னேறினார்.
இதேபோல், பந்துவீச்சாளர் தரவரிசையில் இந்திய சுழற்பந்துவீச்சாளர் அக்சர் படேல் 10-வது இடத்தில் இருந்து ஒரு இடம் சரிந்து 11-வது இடம் பிடித்தார்.
மற்றொரு இந்திய வேகப்பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் 6 இடங்கள் முன்னேறி 15வது இடம் பிடித்துள்ளார். முதலிடத்தில் ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் தொடர்கிறார்.