போட்டியில் பயன்படுத்தும் பந்தை பதுக்கியபோது சிக்கிய ரசிகர்: வீடியோ வைரல்

ஐபிஎல் தொடரின் 60வது லீக் போட்டி கொல்கத்தாவில் நடந்தது.இதில் கொல்கத்தா, மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.
போட்டியில் பயன்படுத்தும் பந்தை பதுக்கியபோது சிக்கிய ரசிகர்: வீடியோ வைரல்
Published on

கொல்கத்தா:

ஐ.பி.எல். தொடரில் லீக் சுற்று போட்டிகள் முடியும் தறுவாயில் உள்ளன. பிளே ஆப் சுற்றுக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதுவரை கொல்கத்தா அணி மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. மும்பை, பஞ்சாப், குஜராத் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றில் இருந்து வெளியேறியுள்ளன.

இதற்கிடையே, ஐபிஎல் தொடரின் 60வது லீக் போட்டி கொல்கத்தாவில் நடந்தது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. மழையால் போட்டி 16 ஓவராக குறைக்கப்பட்டது. இதில் கொல்கத்தா அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில், மைதானத்தில் விழுந்த பந்தை ரசிகர் ஒருவர் மறைத்து எடுத்துச் செல்வதையும், அதை கவனித்த போலீசார் அவரிடம் இருந்து பந்தை பறிமுதல் செய்யும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த ரசிகருக்கு ஆதரவாகவும், எதிர்ப்பு தெரிவித்துகள் பதிவர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com