7 For Some Reason.. ஆகாஷ் சோப்ரா பதிவு வைரல்

வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா வென்றது.இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டி20 போட்டி வருகிற 12-ந் தேதி நடைபெறுகிறது.
7 For Some Reason.. ஆகாஷ் சோப்ரா பதிவு வைரல்
Published on

வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றிய நிலையில் டி20 தொடரையும் இந்திய அணி கைப்பற்றி உள்ளது. முதல் டி20 போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டி20 போட்டி நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் இந்தியா 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் தொடரை வென்ற இந்திய அணிக்கு பாராட்டுகளை 7 என்ற டோனியின் ஜெர்சி நம்பரை வைத்து ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். இதற்கு டோனி ரசிகர்கள் thala for a reason என கொண்டாடி வருகின்றனர்.

அதன்படி இந்திய முதல் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது டி20 போட்டியில் இந்தியா 7 பந்து வீச்சாளர்களை பயன்படுத்தி உள்ளது. இந்த 7 பந்து வீச்சாளர்களும் விக்கெட்டுகளை வீழ்த்தினர். மேலும் இந்தியாவில் தொடர்ச்சியாக 7 தொடர்களை இந்தியா கைப்பற்றி உள்ளது என கூறி 7 for some reason என கூறி வருகின்றனர். இது டோனி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com