

2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது. இதனைடுத்து ஆட்டம் மழையால் தடைப்பட்டதால் போட்டி 15 ஓவர்களாக குறைக்கப்பட்டு 171 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இறுதிப்போட்டியில் கடைசி 2 பந்துகளில் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது களத்தில் இருந்த ஜடேஜா அடுத்தடுத்த பந்துகளில் சிக்ஸ், போர் அடித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 5 ஆவது ஐபிஎல் கோப்பையை வாங்கி கொடுத்தார்.
5 ஆவது ஐபிஎல் கோப்பையை சிஎஸ்கே அணி வென்று இன்றோடு 500 நாட்கள் நிறைவடைந்துள்ளது. அதை கொண்டாடும் விதமாக ஐபிஎல் இறுதிப்போட்டியில் வெற்றிக்கு தேவையான ரன்களை அடித்துவிட்டு ஜடேஜா கொண்டாடும் புகைப்படத்தைப் சிஎஸ்கே அணி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
5⃣0⃣0⃣ days of "OHH JADDEEJJJJAAA" ? pic.twitter.com/aQv1dp1oJF