3வது ஒருநாள் போட்டி: 351 ரன்கள் இலக்கை எட்டி இந்தியாவை வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ்

இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 351 ரன்களைக் குவித்தது.
இந்தியாவை வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ்
இந்தியாவை வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ்
Published on: 
Summary

இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.

வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரின் முதல் இரு போட்டிகளில் இந்தியா வென்று 2-0 என தொடரைக் கைப்பற்றியது.

3வது ஒருநாள் போட்டி

இந்நிலையில், இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3வது ஒருநாள் போட்டி நியூ சண்டிகரில் இன்று நடைபெற்றது.

பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய இந்தப் போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி களமிறங்கியது.

டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பவுலிங் செய்தது.

ஆரம்பமே அதிர்ச்சி

முதலில் களமிறங்கிய இந்திய அணி ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. சுப்மன் கில் ஒரு ரன்னிலும், விராட் கோலி டக் அவுட்டும் ஆகினர். ரோகித் சர்மாவுடன் கெய்க்வாட் இணைந்தார். நிதானமாக ஆடிய இந்த ஜோடி பொறுமையாக ரன்களைச் சேர்த்தது.

3வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 137 ரன்கள் சேர்த்த நிலையில் ரோகித் சர்மா 92 ரன்னில் அவுட்டானார். கெய்க்வாட் அரை சதம் கடந்து 57 ரன்னில் அவுட்டானார்.

கே.எல்.ராகுல் சதம்

அடுத்து வந்த கே.எல்.ராகுல் முதலில் பொறுமையாக ஆடினார். கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடி சதமடித்து அசத்தினார். நமன் தீர் 23 பந்தில் 30 ரன்னும், அன்ஷுல் கம்போஜ் 17 ரன்னும் எடுத்தனர்.

இறுதியில், இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 351 ரன்களைக் குவித்தது. கே.எல்.ராகுல் 129 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஜெய்டன் சீல்ஸ் 3 விக்கெட்டும், கீமோ பால் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 352 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது.

வெஸ்ட் இண்டீஸ்

வெஸ்ட் இண்டீஸ் அணி 352 ரன்கள் என்ற இலக்கை 49வது ஓவரில் விரட்டிப் பிடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.

ஒருநாள் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் துரத்திய அதிகபட்ச இலக்கு இதுவாகும்

இதன்மூலம் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று இந்தியா மூன்று போட்டிகள் கொண்ட தொடரைக் கைப்பற்றிய நிலையில், மேற்கிந்திய தீவுகளுக்கு இது ஒரு ஆறுதல் வெற்றியாக அமைந்தது.

143 பந்துகளில் 17 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடித்து 162 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்ட வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஷாய் ஹோப் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com