2-வது டெஸ்ட்: பாகிஸ்தானை 154 ரன்னில் சுருட்டியது வெஸ்ட் இண்டீஸ்

முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் 163 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் தரப்பில் ரிஸ்வான் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
2-வது டெஸ்ட்: பாகிஸ்தானை 154 ரன்னில் சுருட்டியது வெஸ்ட் இண்டீஸ்
Published on

முல்தான்:

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி முல்தானில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது

அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, தொடக்கம் முதலே பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணியில் மோட்டி (55) மட்டுமே நிலைத்து ஆடி அரைசதமடித்து அவுட் ஆனார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேற வெஸ்ட் இண்டீஸ் அணி 163 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் தரப்பில் நோமன் அலி 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சில் களமிறங்கிய பாகிஸ்தான் அணியும் தொடக்கம் முதலே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியில் பொறுப்பாக ஆடிய முகமது ரிஸ்வான் 49 ரன்கள் எடுத்தார். சவுத் ஷகீல் 32 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர்.

இறுதியில் பாகிஸ்தான் அணி 154 ஆல் அவுட் ஆனது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் வாரிகன் 4 விக்கெட்டும், மோட்டி 3 விக்கெட் வீழ்த்தினர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 9 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com