நியூசிலாந்து `ஏ' அணிக்கெதிரான 2-வது டெஸ்ட்: ஜூரல், படிக்கல் அபாரம்

ஜெய்ஸ்வால் டக்அவுட்டில் வெளியேற, சாய் சுதர்சன் 41 ரன்கள் சேர்த்தார்.
ஜூரல்- தேவ்தத் படிக்கல்
ஜூரல்- தேவ்தத் படிக்கல்
Published on: 

இந்தியா `ஏ' அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து நியூசிலாந்து `ஏ' அணிக்கெதிராக 3 போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டியில் கடைசி விக்கெட்டை வீழ்த்த முடியாததால் இந்தியா வெற்றியை தவறவிட்டது.

இந்த நிலையில் கிறிஸ்ட்சர்ச்சில் இன்று 2-வது போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து `ஏ' பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியா `ஏ' அணியின் ஜெய்ஸ்வால் மற்றும் சாய் சுதர்சன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஜெய்ஸ்வால் ரன் ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார்.

படிக்கல், ஜூரல் அபாரம்

அடுத்து சாய் சுதர்சன் உடன் தேவ்தத் படிக்கல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று விளையாடியது. சாய் சுதர்சன் 41 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

தேவ்தத் படிக்கல் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்து, 80 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த யாஷ் ரதோட் 13 ரன்களில் வெளியேறினார்.

ஆனால் துருவ் ஜூரல் சிறப்பாக விளையாடினார். ரவிச்சந்திரன் ஸ்மரன் (0), வாஷிங்டன் சுந்தனர் (8), மானவ் சுதவர் (22) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

முதல் நாளில் இந்தியா `ஏ' 291/7

8-வது விக்கெட்டுக்கு ஜூரல் உடன் ஆகாஷ் தீப் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி முதல்நாள் ஆட்டம் முடியும் வரை விக்கெட் இழக்கவில்லை. இதனால் இந்தியா ஏ முதல் நாளில் 88 ஓவர்கள் விளையாடி 7 விக்கெட் இழப்பிற்கு 291 ரன்கள் எடுத்துள்ளது. ஜூரல் 99 ரன்களுடனும், ஆகாஷ் தீப் 25 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

முதல் போட்டியில் தேவ்தத் படிக்கல் 2-வது இன்னிங்சில் 199 ரன்கள் குவித்தார். 3-வது போட்டி நவம்பர் 7-ந்தேதி தொடங்க இருக்கிறது.

X