வங்கதேசத்திற்கு எதிரான 2 ஆவது டெஸ்ட்: இலங்கை அணி இன்னிங்ஸ் வெற்றி

வங்கதேசம் அணிமுதல் இன்னிங்சில் 247 ரன்னில் ஆல்அவுட் ஆனது. முதல் இன்னிங்சை ஆடிய இலங்கை 458 ரன்கள் குவித்தது.
வங்கதேசத்திற்கு எதிரான 2 ஆவது டெஸ்ட்: இலங்கை அணி இன்னிங்ஸ் வெற்றி
Published on

இலங்கை- வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் கொழும்பில் (எஸ்எஸ்சி) கடந்த 25ஆம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு செய்தது. இலங்கையின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 247 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை 458 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் பதுன் நிசாங்கா 158 ரன்கள் விளாசினார். குசால் மெண்டிஸ் 84 ரன்களும், தினேஷ் சண்டிமல் 93 ரன்களும் சேர்த்தனர்.

பின்னர் 211 ரன்கள் பின்தங்கிய நிலையில் வங்கதேசம் 2ஆவது இன்னிங்சை தொடங்கியது. 2ஆவது இன்னிங்சிலும் இலங்கை வீரர்கள் சிறப்பாக பந்து வீசினர். இதனால் இன்றைய 3ஆவது நாள் ஆட்ட முடிவில் வங்கதேச அணி 6 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து 4 ஆம் நாளில் விளையாடிய வங்கதேசம் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து 133 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதன்மூலம் இன்னிங்ஸ் மற்றும் 78 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் டிராவில் முடிந்த நிலையில், 2 ஆவது டெஸ்டில் வெற்றி பெற்று 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1 - 0 என்ற கணக்கில் இலங்கை கைப்பற்றியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com