வீடியோ: பிக்பாஷ் தொடரில் அதிவேக சதம்: 11 ஆண்டுக்கு பிறகு சாதித்த 23 வயது இளம் வீரர்

2025-ம் ஆண்டுக்கான பிக்பாஷ் கோப்பையை ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணி வென்றது.இறுதி போட்டியில் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணி வீரர் ஓவன் 39 பந்தில் சதம் அடித்து அசத்தினார்.
வீடியோ: பிக்பாஷ் தொடரில் அதிவேக சதம்: 11 ஆண்டுக்கு பிறகு சாதித்த  23 வயது இளம் வீரர்
Published on

பிக்பாஷ் லீக் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் வார்னர் தலைமையிலான சிட்னி தண்டரும் நாதன் எல்லீஸ் தலைமையிலான ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணியும் மோதின.

இதில் டாஸ் வென்ற ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய சிட்னி தண்டர் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜேசன் சங்கா 67 ரன்கள் குவித்தார். ஹோபார்ட் ஹரிகேன்ஸ் தரப்பில் கேப்டன் எல்லீஸ், ரிலே மெரிடித் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனையடுத்து களமிறங்கிய ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணி 14.1 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 185 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

இந்நிலையில் இந்த போட்டியில் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணிக்கு தொடக்க வீரராக களமிறங்கிய 23 வயதான இளம் வீரர் மிட்செல் ஓவன் அதிரடியாக விளையாடினார். இதனால் ஓவன் 39 பந்தில் சதம் அடித்து அசத்தினார்.

இதன்மூலம் பிக்பாஷ் தொடரில் அதிகவேக சதம் அடித்த கிரெய்க் சிம்மன்ஸ் (39) சாதனையை ஓவன்(39) சமன் செய்தார். 2014-ம் ஆண்டு நிகழ்த்தி இந்த சாதனையை ஓவன் 11 ஆண்டுகளுக்கு பிறகு சமன் செய்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com