

மும்பை இந்தியன்ஸ் பயிற்சியாளர் பதவிக்காக போட்டியிடும் 5 பேருக்கு இன்று நேர்காணல் நடத்தப்பட உள்ளது.
ஐ.பி.எல்.கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த மகிளா ஜெயவர்த்தனே தனது பொறுப்பில் இருந்து நேற்று விலகினார்.
அவர் 2017 முதல் 2022 வரை பயிற்சியாளராகப் பணியாற்றினார். அதன்பின் 2-வது முறையாக கடந்த 2 சீசனில் பயிற்சியாளராக இருந்தார். ஜெயவர்த்தனே பயிற்சிக் காலத்தில் மும்பை இந்தியன்ஸ் 3 ஐ.பி.எல். கோப்பையை வென்றது.
இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய பயிற்சியாளர் தேடும் பணியை அந்த அணி நிர்வாகம் தொடங்கிவிட்டது.
தலைமை பயிற்சியாளர் பதவிக்கு 5 பேர் கொண்ட இறுதி பட்டியலை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதில் 2 பேர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களிடம் இன்று நேர்காணல் நடைபெறும் என்றும் மும்பை இந்தியன்ஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த மைக் ஹஸ்சி, ஆரோன் பிஞ்ச், தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த மார்க் பவுச்சர், அட்ரியன் பாரல், இங்கிலாந்து முன்னாள் கேப்டன் இயன் மார்கன் ஆகிய 5 பேர் மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய பயிற்சியாளர் பட்டியலில் உள்ளனர்.
இதில் மைக் ஹஸ்சிக்கு அதிக வாய்ப்பு என கூறப்படுகிறது. அவர் அதிகபட்சமாக 9 ஆண்டுக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பேட்டிங் பயிற்சியாளராக பணியாற்றி இருந்தார்.
மார்க் பவுச்சர் ஏற்கனவே மும்பை அணியின் பயிற்சியாளராக இருந்தவர் ஆவார்.