முதல் டி20: இந்தியாவுக்கு 157 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆப்கானிஸ்தான்

போட்டியின் தொடக்கத்தில் முதல் முறையாக வந்தே மாதரம் இசைக்கப்பட்டது.
முதல் டி20
முதல் டி20
Published on

இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது.

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி இதுவாகும்.

போட்டியின் தொடக்கத்தில் முதல் முறையாக வந்தே மாதரம் இசைக்கப்பட்டது.

இந்திய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் டாஸ் வென்று முதலில் பந்துவீசத் தீர்மானித்தார்.

ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. ஆப்கானிஸ்தான் அணிக்காக குர்பாஸும், கேப்டன் இப்ராஹிம் ஜத்ரானும் பேட்டிங் செய்ய வந்தனர்.

இந்திய பந்துவீச்சாளர்களுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் பேட்டிங் வரிசை தடுமாறியது. ஒரு கட்டத்தில் ஆப்கானிஸ்தான் 43 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இருப்பினும், அஸ்மத்துல்லா உமர்சாயின் அரைசதம், ஆப்கானிஸ்தான் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் என்ற ஸ்கோரை எட்ட உதவியது. மேலும் உமர்சாய் 44 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 64 ரன்கள் எடுத்தார்.

வெற்றிக்கு 157 ரன்கள் என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com