தோஹா டயமண்ட் லீக் தொடரை தவறவிடும் நீரஜ் சோப்ரா

ஒலிம்பிக் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கம், வெள்ளி வென்றுள்ளார்.
neeraj chopra
Published on

தோஹா டயமண்ட் லீக் தொடர் ஜூன் 19-ம் தேதி கத்தாரில் தொடங்குகிறது. இதில் முன்னணி வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.

இந்நிலையில், இந்தியாவின் நட்சத்திர வீரரான நீரஜ் சோப்ரா தோஹா டயமண்ட் லீக் தொடரில் பங்கேற்க மாட்டார்.

சுவிட்சர்லாந்தில் காயத்துக்கு சிகிச்சை எடுத்து வருவதால் அவர் இந்தத் தொடரில் பங்கேற்கவில்லை என தெரிவித்துள்ளார்.

ஒலிம்பிக்கில் தங்கம், வெள்ளி வென்றுள்ள நீரஜ் சோப்ரா கடந்த ஆண்டு நடைபெற்ற தோஹா டயமண்ட் லீக் தொடரில் 90 மீட்டருக்கு அதிகமாக ஈட்டி எறிந்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com