உலகக் கோப்பை செஸ் இறுதிப்போட்டி: 2வது சுற்றையும் டிரா செய்த ஹம்பி-திவ்யா

உலகக் கோப்பை செஸ் இறுதிப்போட்டி இரு ஆட்டங்கள் கொண்டதாகும். இறுதிப்போட்டிக்கான டைபிரேக்கர் சுற்றில் ஹம்பி-திவ்யா மீண்டும் மோதுகிறார்கள்.
உலகக் கோப்பை செஸ் இறுதிப்போட்டி: 2வது சுற்றையும் டிரா செய்த ஹம்பி-திவ்யா
Published on

பதுமி:

பெண்கள் உலகக் கோப்பை செஸ் போட்டி ஜார்ஜியாவில் உள்ள பதுமி நகரில் நடந்து வருகிறது.

இதன் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனைகள் கோனெரு ஹம்பி - திவ்யா தேஷ்முக் மோதினர். இறுதிச்சுற்று இரு ஆட்டங்கள் கொண்டதாகும்.

நேற்று நடந்த இறுதிப்போட்டிக்கான முதல் ஆட்டத்தில் ஆடிய திவ்யா தேஷ்முக் ஹம்பியுடன் டிரா செய்தார். இதனால் இருவருக்கும் தலா அரை புள்ளி வழங்கப்பட்டது. இந்த ஆட்டம் சுமார் 4 மணி நேரம் நீடித்தது.

இந்நிலையில், இன்று நடைபெற்ற இறுதிப்போட்டிக்கான 2-வது ஆட்டத்தில் ஹம்பி- திவ்யா மீண்டும் மோதினர். இந்த சுற்றும் சமனில் முடிந்தது. இதனால், ஆட்டம் டை பிரேக்கர் சுற்றுக்கு சென்றது.

வெற்றியாளரை தீர்மானிக்கும் டை பிரேக்கர் சுற்று நாளை நடக்கிறது. இதில் வெற்றி பெறுபவரே புதிய சாம்பியன் ஆவார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com