சென்னை பல்கலைக்கழக தடகளம்: சாதனை படைத்த வீராங்கனைகள்

பெண்களுக்கான குண்டு எறிதலில் ஷர்மிளா 13.20 மீட்டர் தூரம் எறிந்து புதிய சாதனை படைத்தார்.10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் டி.லதா 37 நிமிடம் 34.34 வினாடியில் கடந்து புதிய சாதனை நிகழ்த்தினார்.
ஷர்மிளா - டி.லதா
ஷர்மிளா - டி.லதா
Published on

சென்னை:

சென்னை பல்கலைக்கழகம் சார்பில் 56-வது ஏ.எல். முதலியார் பொன்விழா நினைவு தடகள போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் 1120 கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனர்.

2-வது நாளான நேற்று 5 புதிய சாதனை நிகழ்த்தப்பட்டது. பெண்களுக்கான குண்டு எறிதலில் எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரி வீரர்களை ஷர்மிளா 13.20 மீட்டர் தூரம் எறிந்து புதிய சாதனை படைத்தார். 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் எம்.ஓ.பி. வீராங்கனை டி.லதா 37 நிமிடம் 34.34 வினாடியில் கடந்து புதிய சாதனை நிகழ்த்தினார். 100 மீட்டர் ஓட்டத்தில் கிருத்திகா (எத்திராஜ்) சாதனை படைத்தார்.

ஆண்களுக்கான குண்டு எறிதலில் டி.ஜி. வைஷ்ணவா மாணவர் ஆர்யன் தியாகி (17.91 மீட்டர் தூரம்), ஈட்டி எறிதலில் தனுஜ் காலிரா (டி.ஜி.வைஷ்ணவா, 74.50 மீட்டர் தூரம்) ஆகியோர் சாதனை படைத்தனர். இன்றுடன் போட்டி முடிகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com