சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ்: உஸ்பெகிஸ்தான் வீராங்கனை போலினா கால் இறுதிக்கு தகுதி

போலினா 6-3, 6-0 என்ற நேர்செட் கணக்கில் வென்று கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.
Tennis player Polina
Published on: 

3-வது சென்னை ஓபன் மகளிர் சர்​வ​தேச டென்​னிஸ் சாம்பியன்​ஷிப் போட்டி (டபிள்யு டி.ஏ. 250) நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்​.டி.ஏ. டி மைதானத்​தில் நடைபெற்று வருகிறது.

உஸ்பெகிஸ்தான் வீராங்கனை

3-வது நாளான நேற்று உஸ்பெகிஸ்தான் நாட்டை சேர்ந்தவரும், இந்த போட்டியின் தரவரிசையில் 6-வது இடத்தில் இருப்பவருமான போலினா குடெர்மேடோவா 2-வது சுற்றில் ஸ்பெயினை சேர்ந்த ஒக்சானா செலமேடேவாவை எதிர்கொண்டார்.

இதில் போலினா 6-3, 6-0 என்ற நேர்செட் கணக்கில் வென்று கால் இறுதிக்கு தகுதி பெற்றார். இந்த வெற்றியை பெற அவருக்கு ஒரு மணி 19 நிமிட நேரம் தேவைப்பட்டது.

மற்ற ஆட்டங்களில் தமிழகத்தை சேர்ந்த மாயா ராஜேஸ்வரன் ரேவதி, முதல் நிலை வீராங்கனையான ஜான்ஸ் ஜென் (இந்தோனேசியா) ராபின் மான்ட் கோபரி (அமெரிக்கா) ஆகியோரும் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறினார்கள்.

இந்திய ஜோடி தோல்வி

இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அங்கிதா ரெய்னா -ஜப்பானின் குவாட்டா ஜோடி தோற்று இருந்தது. இதேபோல் திவ்யா ரமேஷ்- ருதுராஜா போஸ்லே ஜோடியும் தோல்வியை தழுவி வெளியேறியது.

இந்த ஜோடி 2-6, 2-6 என்ற செட் கணக்கில் சுவிட்சர்லாந்து ஜோடியிடம் தோற்றது. இந்தியாவின் மற்றொரு ஜோடியான வைஷ்ணவி அட்கர்- ருதுஜா போஸ்லே ஜோடி கால் இறுதிக்கு தகுதி பெற்றது.

இன்றைய ஆட்டம்

இன்று மாலை நடைபெறுகிறது. ஒற்றையர் ஆட்டங்களில் மாக்டா லினெட் (போலந்து)-மோயுகா உஜிமா (ஜப்பான்), ஸ்டெபானி (இத்தாலி)- சிமோனா வால்டரெட், வைஷ்ணவி அட்கர் (இந்தியா)- அனஸ்டசியா ஜகரோவா (உஸ்பெ கிஸ்தான்), ஹோண்டாமா (ஜப்பான்)- ஜிபெக் (கஜ கஸ்தான்) மோதுகிறார்கள்.

X