சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ்: சுவிட்சர்லாந்து ஜோடி அரை இறுதிக்கு தகுதி

இந்தியாவின் முதல் நிலை வீராங்கனையான வைஷ்ணவி அட்கர் 2-வது சுற்றோடு வெளியேறினார்.
Tennis players
Published on: 

3-வது சென்னை ஓபன் மகளிர் சர்​வ​தேச டென்​னிஸ் சாம்பியன்​ஷிப் போட்டி (டபிள்யு டி.ஏ. 250) நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி மைதானத்​தில் நடைபெற்று வருகிறது.

சுவிட்சர்லாந்து ஜோடி

4-வது நாளான நேற்று நடைபெற்ற ஒற்றையர் ஆட்டங்களில் 3-வது வரிசையில் உள்ள மாக்டா லினெட் (போலந்து), 10-ம் நிலை வீராங்கனையான லுக்ரேசியா ஸ்டெபானி (இத்தாலி), அனஸ்டசியா ஜகரோவா (உஸ்பெகிஸ் தான்), ஹோண்டாமா (ஜப்பான்) ஆகியோர் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறினார்கள்.

இந்தியாவின் முதல் நிலை வீராங்கனையான வைஷ்ணவி அட்கர் 2-வது சுற்றோடு வெளியேறினார்.

இரட்டையர் பிரிவில் சுவிட்சர்லாந்தின் நைமா கர்மோன்கா- சிமோனா வால்டெரெட் ஜோடி 6-4, 7-6 ( 7-5) என்ற நேர் செட் கணக்கில் முதல் நிலை வீராங்கனைகளான மோ மோகோ கோபாரி ( ஜப் பான்)- பாலிப்யூச் ( தாய் லாந்து) ஜோடியை அதிர்ச்சி கரமாக வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதி பெற்றது. இதேபோல இந்தியாவின் ரேவதி - ஸ்ரீ வள்ளி பாமிதிபதி ஜோடி கால் இறுதிக்கு முன்னேறியது.

ரேவதி

ஒற்றையர் பிரிவு கால் இறுதி ஆட்டங்கள் இன்று மாலை நடக்கிறது. தமிழகத்தை சேர்ந்த மாயா ராஜேஸ்வரன் ரேவதி கால் இறுதியில் அமெரிக்க வீராங்கனை ராபின் மாண்ட்கோமெரியை சந்திக்கிறார்.

மற்ற கால் இறுதி போட்டிகளில் முதல் நிலை வீராங்க னையான ஜானிஸ் ஜென் (இந்தோனேசியா)-போலினா குடெர்மே டோவா, மாக்டா லினெட் -ஹோண்டாமா, ஸ்டெ பானி - அனஸ்டசியா ஜகரோவா மோதுகிறார்கள்.

X