பேட்மிண்டன் தரவரிசை- 13வது இடத்திற்கு முன்னேறினார் லக்சயா சென்

இரண்டு முறை ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற பி.வி.சிந்து மற்றும் உலகின் முன்னாள் நம்பர் ஒன் வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் முறையே 7வது மற்றும் 10வது இடங்களில் நீடிக்கின்றனர்.
லக்சயா சென்
லக்சயா சென்
Published on

புதுடெல்லி:

பேட்மிண்டன் வீரர்களின் சர்வதேச தரவரிசைப் பட்டியலை உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவின் இளம் வீரர் லக்சயா சென், 17வது இடத்தில் இருந்து 13வது இடத்திற்கு முன்னேறி உள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த இந்தியா ஓபன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றதன்மூலம், இந்த இடத்திற்கு முன்னேறியிருக்கிறார். இதுவே அவரது வாழ்நாளில் சிறந்த தரநிலையாகும்.

இதேபோல் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியா ஓபனில் பட்டம் வென்ற சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிரக் ஷெட்டி ஜோடி, சர்வதேச தரவரிசையில் 10வது இடத்தில் இருந்து 8வது இடத்திற்கு முன்னேறியது. 

இரண்டு முறை ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற பி.வி.சிந்து மற்றும் உலகின் முன்னாள் நம்பர் ஒன் வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் முறையே 7வது மற்றும் 10வது இடங்களில் நீடிக்கின்றனர். பி.சாய் பிரனீத்தும் 18வது இடத்தில் நீடிக்கிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com