ஆசிய விளையாட்டு: துப்பாக்கிச் சுடுதலில் மேலும் ஒரு பதக்கம்

மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றது.
shooting
Published on
Summary

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு துப்பாக்கிச் சுடுதலில் மேலும் ஒரு பதக்கம் கிடைத்தது.

துப்பாக்கிச் சுடுதலில் வெண்கலம்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் துப்பாக்கிச் சுடுதலில் ஸ்கீட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் அனந்த்ஜித் நருகா- பரினாஸ் தலிவால் ஜோடி 44 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது.

சீனா 52 புள்ளிகள் பெற்று உலக சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வென்றது. தென்கொரியாவுக்கு வெள்ளிப் பதக்கம் (51 புள்ளிகள்) கிடைத்தது.

ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர்பிஸ்டல் அணிகள் பிரிவில் இந்திய அணி 4-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தைத் தவறவிட்டது.

ஆகாஷ் பரத்வாஜ் கமல்ஜீத், பாலகிருஷ்ணா ஆகியோர் அடங்கிய அணி 1,727 புள்ளிகள் பெற்று 4-வது இடம் பிடித்தது.

தனி நபர் பிரிவிலும் ஏமாற்றமே கிடைத்தது. கமல்ஜீத் 580 புள்ளிகள் பெற்று 9-வது இடம் பிடித்தார். இதனால் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறவில்லை.

மற்ற இந்திய வீரர்களான பரத்வாஜ் 11-வது இடத்தையும், பாலகிருஷ்ணா 35-வது இடத்தையும் பிடித்தனர்.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா இதுவரை 1 தங்கம், 6 வெள்ளி, 8 வெண்கலம் என 15 பதக்கங்களைப் பெற்றது.

X

Maalai Malar
www.maalaimalar.com