ஆசிய விளையாட்டு: வில்வித்தையில் வெண்கலம் வென்றார் கணேஷ் மணிரத்னம்

ஆசிய விளையாட்டு போட்டிகள் ஜப்பானில் நடந்து வருகிறது.
ganesh mani ratnam
Published on: 
Summary

ஆசிய விளையாட்டுப் போட்டியில் வில்வித்தையில் இந்தியாவுக்கு இன்று வெண்கலப் பதக்கம் கிடைத்தது.

ஆசிய விளையாட்டு போட்டிகள் ஜப்பானில் நடந்து வருகிறது. இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் தங்களது அபார திறமையால் தொடர்ந்து பதக்கங்களைக் குவித்து வருகின்றனர்.

இந்தியா இதுவரை 10 தங்கம், 22 வெள்ளி, 30 வெண்கலம் என மொத்தம் 62 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

இந்நிலையில், வில்வித்தையில் ஆண்களுக்கான தனிநபர் பிரிவில் தமிழக வீரர் கணேஷ் மணிரத்னம் வெண்கலப் பதக்கம் வென்றார்.

வியட்நாம் வீரருடன் நடந்த வெண்கலத்துக்கான போட்டியில் அவர் 149 புள்ளிகள் பெற்றார்.

ஏற்கனவே காம்பவுண்ட் வில்வித்தை பிரிவில் தமிழக வீரர் கணேஷ் மணிரத்னம் தங்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா இதுவரை 10 தங்கம், 22 வெள்ளி, 21 வெண்கலம் என மொத்தம் 63 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com