ஒலிம்பிக்கில் பங்கேற்கும் சரத்கமலுக்கு பாராட்டு

நிகழ்ச்சியில் சரத்கமலுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. ஒலிம்பிக்கில் தேசிய கொடியை ஏந்திச் செல்லும் சரத்கமல், 5 முறை ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ளார்.
ஒலிம்பிக்கில் பங்கேற்கும் சரத்கமலுக்கு பாராட்டு
Published on

உலக தரம் வாய்ந்த சில நிறுவனங்களின் தயாரிப்புகளை விற்பனை செய்யும் முன்னணி நிறுவனமாக டைம்லிங்க்ஸ், பாரிஸ் ஒலிம்பிக் 2024-க்கான அதன் பிராண்ட் தூதராக டேபிள் டென்னிஸ் வீரர் சரத்கமலை பெருமையுடன் அறிவித்துள்ளது.

இதற்கான நிகழ்ச்சி டைம்லிங்க்ஸ் நிர்வாக இயக்குநர்கள் சிவகுமார், சித்ரா சிவக்குமார் ஆகியோர் முன்னிலையில் சென்னையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சரத்கமலுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அவரும், இந்திய அணியும் ஒலிம்பிக்கில் சிறப்பாக செயல்பட டைம் லிங்க்ஸ் வாழ்த்து தெரிவித்தது.

ஒலிம்பிக்கில் தேசிய கொடியை ஏந்திச் செல்லும் சரத்கமல், 5 முறை ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ளார். 10 முறை தேசிய சாம்பியனும் ஆவார். பத்மஸ்ரீ, கேல் ரத்னா, அர்ஜுனா விருதுகளையும் பெற்றவர்.

X

Maalai Malar
www.maalaimalar.com