புரோ கபடி லீக்: தமிழ் தலைவாசை வீழ்த்தியது பெங்களூரு புல்ஸ்

புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. பெங்களூரு புல்ஸ் அணியிடம் தமிழ் தலைவாஸ் தோல்வி அடைந்தது.
புரோ கபடி லீக்: தமிழ் தலைவாசை வீழ்த்தியது பெங்களூரு புல்ஸ்
Published on

சென்னை:

12-வது புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. தற்போது லீக் ஆட்டங்கள் சென்னையில் நடந்து வருகின்றன.

இந்நிலையில், இன்று இரவு நடந்த 2வது ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ், பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின.

ஆரம்பத்தில் இருந்தே இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடி புள்ளிகள் எடுத்தனர்.

இறுதியில், பெங்களூரு புல்ஸ் அணி 33-29 என்ற புள்ளிக்கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. புள்ளிப் பட்டியலில் தமிழ் தலைவாஸ் அணி 8-வது இடத்தில் உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com