புரோ கபடி லீக்: டை பிரேக்கரில் தெலுகு டைட்டன்சை வீழ்த்தியது பெங்கால் வாரியர்ஸ்

12-வது புரோ கபடி லீக் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது.இன்று நடந்த ஆட்டத்தில் தெலுகு டைட்டன்ஸ் தோல்வி அடைந்தது.
புரோ கபடி லீக்: டை பிரேக்கரில் தெலுகு டைட்டன்சை வீழ்த்தியது பெங்கால் வாரியர்ஸ்
Published on

புதுடெல்லி:

12 அணிகள் பங்கேற்றுள்ள 12-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. நான்காவது கட்டமாக தலைநகர் டெல்லியில் நடந்து வருகிறது.

இன்று நடந்த போட்டியில் பெங்கால் வாரியர்ஸ், தெலுகு டைட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடி புள்ளிகள் எடுத்தனர்.

இறுதியில், 45-45 என புள்ளிகள் எடுத்ததால் டை பிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டது.

இதில் பெங்கால் வாரியர்ஸ் அணி 7-5 என்ற கணக்கில் திரில் வெற்றி பெற்றது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com