

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் முதல் சுற்றில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டி ஒடென்சே நகரில் நேற்று தொடங்கியது. இந்தத் தொடர் வரும் 18-ம் தேதி வரை நடக்கிறது.
இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, இந்தோனேசியாவின் ஆல்வி பர்ஹான் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய ஆல்வி பர்ஹான் 21-11 என வென்றார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆடிய ஆயுஷ் ஷெட்டி 2-வது செட்டை 21-13 என கைப்பற்றினார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை ஆல்வி பர்ஹான் 21-10 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
இதன்மூலம் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
ஏற்கனவே இந்தியாவின் லக்சயா சென், பி.வி.சிந்து ஆகியோரும் முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்து வெளியேறியுள்ளனர்.