உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன்: 3வது சுற்றுக்கு முன்னேறினார் ஆயுஷ் ஷெட்டி

உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடர் டெல்லியில் நடந்து வருகிறது.
ayush shetty
Published on: 

உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடர் டெல்லி இந்திரா காந்தி உள்ளரங்கில் நடந்து வருகிறது. இந்தத் தொடரில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, இலங்கையின் அபேய்விக்ரமா உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய ஆயுஷ் ஷெட்டி 21-8, 21-10 என்ற செட் கணக்கில் வென்று 3வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் இந்தியாவின் லக்‌ஷயா சென் 21-19, 19-21, 17-21 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் காரட் டானிடம் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com