கடைசி நேர பெரிய மாற்றங்களைத் தவிர்க்க வேண்டும்..!- 2027 உலகக்கோப்பை குறித்து யுவராஜ்சிங் முக்கிய அறிவுரை!

ஒரு ஆண்டுக்கு பிறகு விளையாடப் போகும் அதே அணியை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.
Yuvaraj singh
Published on

2011-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் (50 ஓவர்) தொடர் நாயகன் விருது பெற்ற யுவராஜ்சிங் கூறியதாவது:-

மாற்றத்தை தவிர்க்க வேண்டும்

2027-ம் ஆண்டு நடைபெறும் ஒரு நாள் போட்டிக்கான உலக கோப்பை போட்டிக்கு முன்பு மிகப் பெரிய அளவிலான மாற்றங்களை தவிர்க்க வேண்டும்.

20 ஓவர் உலக கோப்பை வெற்றிகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு 50 ஓவர் உலக கோப்பைக்கான நிலையான ஒரு அணியை உருவாக்க வேண்டும்.

2027 உலக கோப்பையை கைப்பற்ற சிறந்த அணியை தேர்ந்தெடுத்து அதில் உறுதியாக இருக்க வேண்டும். அப்போதுதான் அந்த வீரர்களுக்கு போதுமான நேரம் கிடைக்கும். கடந்த காலங்களில் இந்திய அணிக்கு பாதிப்பை ஏற்படுத்திய கடைசி நேர பெரிய மாற்றங்கள் செய்வதை தவிர்க்க வேண்டும்.

ஒரு ஆண்டுக்கு பிறகு விளையாடப் போகும் அதே அணியை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் கடைசி நேரத்தில் பெரிய மாற்றம் செய்யக் கூடாது.

கடைசி நேரத்திலோ அல்லது தொடர் நடைபெற்று கொண்டு இருக்கும் போதோ பெரிய மாற்றங்களை செய்த போதெல்லாம் இந்தியா சறுக்கலை சந்தித்து உள்ளது.

எனவே உலக கோப்பையை வெல்லக் கூடியது என்று நம்பும் அணியை உறுதி செய்து அவர்களுடன் நிற்பது முக்கியம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com