

உலகின் டாப் 8 வீரர்கள் பங்கேற்ற ஏ.டி.பி. இறுதிச்சுற்று டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடைபெற்றது.
நேற்று நடந்த இறுதிப் போட்டியில் முதல்நிலை வீரரான அலெக்சாண்டர் சுவரேவ் (ஜெர்மனி)- இரண்டாவது வரிசையில் உள்ள கார்லோஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) மோதினார்கள்.
இதில் அல்காரஸ் 6-2, 7-6 (9-7) என்ற நேர் செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் பெற்றார். இந்த வெற்றியை பெற அவருக்கு 2 மணி 2 நிமிட நேரம் தேவைப்பட்டது.
23 வயதான அல்காரஸ் முதல் முறையாக ஏ.டி.பி பட்டத்தை கைப்பற்றினார். தொடர்ச்சியாக 14 ஆட்டங்களில் அவருக்கு வெற்றி கிடைத்தது. சாம்பியன் பட்டம் வென்ற அவருக்கு ரூ.47.80 கோடி பரிசு தொகை கிடைத்தது.